செய்திகள்

புதுவையில் மேலும் ஒரு சிறுமி கற்பழிப்பு - வாலிபர் கைது

Published On 2018-07-24 16:02 IST   |   Update On 2018-07-24 16:02:00 IST
புதுவையில் மேலும் ஒரு சிறுமி கற்பழிக்கப்பட்ட சம்பவத்தில் போலீசார் வாலிபரை கைது செய்துள்ளனர். அந்த மாணவிக்கு மருத்துவ பரிசோதனை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி:

புதுவை ரெட்டியார் பாளையத்தை சேர்ந்த சிறுமி ஒருவரை கடத்தி சென்று திருக்கனூர் பகுதியில் 8 பேர் கற்பழித்த சம்பவம் புதுவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் புதுவையில் மேலும் ஒரு சிறுமி கற்பழிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் ஊழியர் குடியிருப்பு உள்ளது. இங்கு பெண் ஊழியர் ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். அந்த பெண்ணுக்கு 16 வயது மகள் இருக்கிறார். இவர் பள்ளியில் படித்து வந்தார்.

இதே குடியிருப்பில் ஜிப்மர் காவலாளி ஒருவரும் வசித்து வந்தார். அவரது மகன் முகேஷ் (வயது 26). அவர் அந்த மாணவியிடம் பழகி வந்தார். அப்போது எல்லை மீறி நடந்து கொண்டார். இந்த வி‌ஷயம் மாணவியின் தாயாருக்கு தெரிய வந்தது.

இது தொடர்பாக அவர் குழந்தைகள் நல கமிட்டி தலைவர் ராஜேந்திரனிடம் புகார் கொடுத்தார். அவர் இதுபற்றி விசாரித்ததில் மாணவி கற்பழிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து கோரிமேடு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து முகேசை கைது செய்தனர். அந்த மாணவிக்கு மருத்துவ பரிசோதனை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News