செய்திகள்

தொண்டியில் விவசாயி கவனத்தை திசை திருப்பி ரூ.3 லட்சம்-நகை திருட்டு

Published On 2018-07-19 16:45 GMT   |   Update On 2018-07-19 16:45 GMT
தொண்டியில் விவசாயி கவனத்தை திசை திருப்பி ரூ.3 லட்சம் மற்றும் நகையை மர்ம நபர் திருடிக்கொண்டு தப்பி ஓடி விட்டார்.

தொண்டி:

தொண்டி அருகேயுள்ள சேமன்வயலைச் சேர்ந்த விவசாயி சண்முகம் (வயது 52). இவர் சொந்தமாக வீடு கட்டி வருகிறார். வீடு கட்ட பணம் தேவைப்பட்டதால் தொண்டியில் உள்ள கனரா வங்கியில் நகைகளை அடகு வைக்க வந்தார்.

அடகு வைத்து பணம் பெற்றுக் கொண்ட அவர் மீதமுள்ள 18 பவுன் நகை மற்றும் ரொக்கம் ரூ.3 லட்சத்துடன் வெளியே வந்தார்.

தனது இரு சக்கர வாகனத்தில் பையை மாட்டிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் கீழே 50 ரூபாயை வீசினார். பின்னர் சண்முகத்திடம் உங்கள் பணம் கீழே கிடக்கிறது என்றார். அந்த பணத்தை எடுப்பதற்காக சண்முகம் கீழே குனிந்தார்.

அந்த சமயத்தில் அந்த வாலிபர், சண்முகம் இரு சக்கர வாகனத்தில் மாட்டியிருந்த பையை திருடிக் கொண்டு தப்பி ஓடிவிட்டார்.

கண் இமைக்கும் நேரத்தில் பணம்-நகையை பறிகொடுத்த சண்முகம் தொண்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News