செய்திகள்
நெல்லிக்குப்பம் அருகே மணல் கடத்திய 4 மாட்டு வண்டிகள் பறிமுதல்
நெல்லிக்குப்பம் அருகே மணல் கடத்திய 4 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லிக்குப்பம்:
நெல்லிக்குப்பம் அடுத்த கீழ் அருங்குணம் பகுதியில் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது 4 மாட்டு வண்டிகள் வந்து கொண்டிருந்தது. அதனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் கெடிலம் ஆற்றிலிருந்து மணல் கடத்தப்பட்டது தெரிய வந்தது. இதையொட்டி நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து 4 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.