செய்திகள்

சிறுமி கற்பழிப்பு வழக்கை 3 மாதத்தில் முடிக்க போலீஸ் நடவடிக்கை- குற்றப்பத்திரிகை விரைவில் தாக்கல்

Published On 2018-07-18 05:21 GMT   |   Update On 2018-07-18 05:21 GMT
அயனாவரத்தில் 11 வயது சிறுமி கற்பழிக்கப்பட்ட வழக்கை 3 மாதத்தில் நடத்தி முடிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். ஒரு மாதத்தில் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை:

அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் 11 வயது சிறுமி 17 பேர் கும்பலால் கற்பழிக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக வேப்பேரி மகளிர் போலீசார் விசாரணை நடத்தி கைதான 17 பேரிடமும் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர்.

இந்த கொடூர சம்பவம் தொடர்பாக புகார் அளிக்கப்பட்ட உடனேயே தாமதமின்றி உரிய நடவடிக்கைக்கு கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து கூடுதல் கமி‌ஷனர் சாரங்கன் மேற்பார்வையில் விசாரணை முடுக்கி விடப்பட்டது. 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு 50 போலீசார் விசாரணை நடத்தினர்.

இதன் காரணமாகவே சிறுமியை சீரழித்த 17 பேரும் உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

சிறுமி கற்பழிப்பு வழக்கை 3 மாதத்தில் நடத்தி முடிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

ஒரு மாதத்தில் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. சிறுமி ஹாசினி கற்பழிப்பு வழக்கில் குற்றவாளியான வாலிபர் தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை வாங்கி கொடுத்தது போல 17 பேருக்கும் தூக்கு தண்டனை வாங்கி கொடுக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். #ChennaiGirlHarassment #POCSOAct
Tags:    

Similar News