செய்திகள்

ஈரோடு நாடார்மேடு பகுதியில் வீட்டுக்குள் புகுந்த சாரை பாம்பால் பரபரப்பு

Published On 2018-07-16 17:37 GMT   |   Update On 2018-07-16 17:37 GMT
ஈரோடு நாடார்மேடு பகுதியில் 6 அடி நீளமுள்ள சாரை பாம்பு வீட்டுக்குள் புகுந்துள்ளதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு:

ஈரோடு மாநகர் பகுதியில் கடந்த சில மாதங்களாக வீடுகளை நோக்கி படையெடுக்கும் பாம்புகளால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

குறிப்பாக ஈரோடு நாடார்மேடு பகுதி, முத்தம்பாளையம் ஹவுசிங்யுனிட், திண்டல் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் சர்வ சாதாரணமாக பாம்புகள் நடமாட்டம் உள்ளது.

இந்நிலையில் ஈரோடு நாடார்மேடு பகுதியில் உள்ள ரவிக்குமார் என்பவர் வீட்டில் நேற்று சுமார் 6 அடி நீளமுள்ள சாரை பாம்பு புகுந்தது.

வீட்டின் பீரோ கீழ் பகுதியில் நெளிந்து கொண்ட இருந்த பாம்பை பார்த்த ரவிக்குமார் அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து ஈரோடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் மயில்ராஜ் தலைமையிலான வீரர்கள் விரைந்து சென்று சாரை பாம்பை பிடித்தனர்.

பிடிப்பட்ட சாரை பாம்பு கொடிய வி‌ஷம் தன்மை கொண்டது என தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.பின்னர் பாம்பை அடர்ந்த காட்டு பகுதியில் கொண்டு விட்டனர்.

Tags:    

Similar News