செய்திகள்

மதுரையில் 4 குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்

Published On 2018-07-16 19:49 IST   |   Update On 2018-07-16 19:49:00 IST
மதுரையில் 4 குழந்தைகளுடன் இளம்பெண் மாயமானது குறித்து அவரது கணவர் போலீசில் புகார் செய்தார். போலீசார் இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.

மதுரை:

மதுரை சொக்கலிங்கநகர் காளியம்மாள் காம்பவுண்டைச் சேர்ந்தவர் ராஜ் (வயது 35). கூலித் தொழிலாளி. இவரது மனைவி கார்த்தீஸ்வரி (28). இருவருக்கும் 11 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

பொன்மதி (9), குணசீல் (8) ஆகிய 2 மகள்களும், மதன்பாண்டியன்(7), கிஷோர்ராஜ் (5) என்ற 2 மகன்களும் உள்ளனர்.

கடந்த 12-ந் தேதி காலை கார்த்தீஸ்வரி, கணவருடன் கோபித்துக் கொண்டு மதுரை மேல அண்ணாத்தோப்பில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு செல்வதாக கூறிச் சென்றார். அப்போது தனது 4 குழந்தைகளையும் உடன் அழைத்துச் சென்றுள்ளார்.

ஆனால் அவர், பாட்டி வீட்டுக்கு போகாமல் எங்கேயோ சென்று விட்டார். கார்த்தீஸ்வரி மற்றும் குழந்தைகளை உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இது குறித்து கார்த்தீஸ்வரியின் கணவர் ராஜ் மதுரை எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன் வழக்குப்பதிவு செய்து 4 குழந்தைகளுடன் மாயமான இளம்பெண்ணை தேடி வருகிறார்.

Tags:    

Similar News