செய்திகள்

மஞ்சூரில் பலத்த மழை: எமரால்டு அருகே 3 வீடுகள் இடிந்தன

Published On 2018-07-14 12:39 GMT   |   Update On 2018-07-14 12:39 GMT
நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் பலத்த மழையால் எமரால்டு அருகே 3 வீடுகளின் பக்கவாட்டு சுவர்கள் இடிந்து விழுந்தது.

மஞ்சூர்:

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுபுற பகுதிகளில் கடந்த சில தினங்களாக சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இரவு பகலாக இடைவிடாமல் பெய்து வரும் மழையால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தன்று இரவு மஞ்சூர் அருகே உள்ள எமரால்டு இந்திராநகர் பகுதியில் விடிய, விடிய பலத்த மழை பெய்தது. 

இந்த மழையில் அப்பகுதியை சேர்ந்த அருணாச்சலம், காளிமுத்து மற்றும் கோவிந்தம்மாள் ஆகியோரின் வீடுகளின் பக்கவாட்டு சுவர்கள் இடிந்து விழுந்தது. இதுகுறித்த தகவலின் பேரில் குந்தா தாசில்தார் ஆனந்தி மற்றும் வருவாய்துறையினர் இந்திராநகர் பகுதிக்கு சென்று மழையால் இடிந்த வீடுகளை பார்வையிட்டனர்.

தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறிய அதிகாரிகள் நிவாரண உதவி வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதேபோல் எடக்காடு பகுதியில் மின்வாரிய அலுவலகம் அருகே சாலையோரத்தில் மண் சரிவு ஏற்பட்டது. மேலும் மழையுடன் வீசிய சூறாவளி காற்றால் கிண்ணக் கொரை, கோரகுந்தா, அப்பர்பவானி, அவலாஞ்சி பகுதிகளில் ஏராளமான மரங்கள் வேறோடு சாய்ந்து விழுந்துள்ளது.

Tags:    

Similar News