செய்திகள்

அரசு பணிகளை தடுத்ததாக முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் உள்பட 6 பேர் மீது வழக்கு

Published On 2018-07-07 11:57 GMT   |   Update On 2018-07-07 11:57 GMT
பாபநாசத்தில் அரசு பணிகளை தடுத்ததாக முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பாபநாசம்:

பாபநாசம் ஒன்றியம் ராஜகிரி ஊராட்சியில் ஒரு குளத்தில் கொட்டப்பட்டிருந்த குப்பைகளை கலெக்டர் அண்ணாதுரை மற்றும் கும்பகோணம் சப்-கலெக்டர் பிரதீப்குமார் உத்தரவின்பேரில் அங்கிருந்து நேற்று லாரிகள் மூலம் அள்ளப்பட்டது.

இந்த குப்பைகளை அருகில் உள்ள உமையாள்புரம் கிராமத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் கொண்டு சென்று அலுவலர்கள் கொட்டினர். அப்போது திருமலைராஜன் ஆறு வழியாக லாரிகளில் குப்பைகளை கொண்டு சென்ற போது பாபநாசம் திமுக முன்னாள் பேரூராட்சி துணை தலைவர் மணிகண்டன், அக்கரைப் பூண்டி பாலகிருஷ்ணன், படுகை புதுத்தெரு மணிமாறன் உள்பட 6 பேர் அந்த லாரிகளை வழிமறித்து குப்பைகளை இங்கு கொண்டு வந்து கொட்டக்கூடாது என தடுத்தனர். இதனால் பாபநாசம் கிராம நிர்வாக அலுவலர் அன்பரசு பாபநாசம் போலீசில் அரசு பணிகளை செய்ய விடாமல் தடுத்ததாக புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் நாகரத்தினம், சப்-இன்ஸ்பெக்டர் உமாபதி ஆகியோர் மணிகண்டன் உள்பட 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
Tags:    

Similar News