செய்திகள்

திருப்புல்லானி அருகே கட்டிட காண்டிராக்டர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2018-07-06 22:38 IST   |   Update On 2018-07-06 22:38:00 IST
திருப்புல்லானி அருகே கட்டிட காண்டிராக்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லானி அருகே உள்ள தாதனேந்தலைச் சேர்ந்தவர் முருகன் (வயது35). கட்டிட காண்டிராக்டர்.

கடந்த சில மாதங்களாக தொழிலில் பெருமளவில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் முருகன் மிகவும் மனவேதனை அடைந்தார். இந்த நிலையில் அவர் நள்ளிரவு வீட்டில் தூக்கில் தொங்கினார்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த முருகனின் மனைவி தென்னரசி கதறி அழுதார். அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து முருகனை ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென் றனர். அங்கு அவரை பரி சோதித்த டாக்டர்கள் முரு கன் ஏற்கனவே இறந்து விட் டதாக தெரிவித்தனர்.

இது குறித்து திருப்புல் லானி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கீழக் கரை போலீஸ் இன்ஸ் பெக்டர் முத்து மீனாட்சி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். #tamilnews
Tags:    

Similar News