செய்திகள்
தருமபுரி அருகே பிரசவத்தின் போது பெண் மரணம்: போலீஸ் விசாரணை
தருமபுரி மாவட்டம், தொப்பூர் அருகே பிரசவத்தின் போது பெண் மரணமடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம், தொப்பூரை அடுத்த ஏலகிரி கிராமத்தை சேர்ந்தவர் மாதேஷ். இவரது மனைவி சுகுணா. இவர்களது மகள் கோகிலா (வயது21). இவருக்கும் நடப்பனஅள்ளி கிராமத்தை சேர்ந்த கோவிந்தசாமி என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இதனால் கர்ப்பம் அடைந்து நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு கோகிலா அதே பகுதியில் உள்ள பாப்பாரப்பட்டி அடுத்த வத்திமரத்துஅள்ளி அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையத்தில் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார்.
இந்த நிலையில் கடந்த 2-ந்தேதி திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டது. உடனே அவரை தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இன்று அதிகாலை டாக்டர்கள் கோகிலாவை பிரசவ அறைக்கு கொண்டு சென்றனர். அப்போது அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் கோகிலாவுக்கு ரத்த போக்கு அதிகமாக ஏற்பட்டது. இதனால் அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
கோகிலா வத்திமரத்துபட்டி அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையத்தில் பரிசோதனை செய்து வந்தபோது அங்கு சரியான முறையில் சிகிச்சை மேற்கொள்ளவில்லை. நர்சுகள் கவன குறைவால் தான் எனது மகளுக்கு பிரசவத்தின் போது ரத்தபோக்கு அதிகளவில் ஏற்பட்டு உயிரை இழந்தார் என்று கோகிலாவின் தாய் கூறி கதறி அழுதார்.
இது குறித்து டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews