செய்திகள்
காரில் பற்றிய தீயை தீயணைப்பு படையினர் அணைத்தனர்.

நெய்வேலியில் என்.எல்.சி. அதிகாரி வீட்டில் கார் தீப்பிடித்து எரிந்தது

Published On 2018-07-06 15:59 IST   |   Update On 2018-07-06 15:59:00 IST
நெய்வேலியில் என்.எல்.சி. அதிகாரி வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார் தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
நெய்வேலி:

நெய்வேலி புதுநகர் 24-வது வட்டம் டைப்-4 குடியிருப்பு பகுதியில் வசிப்பவர் சம்பத்குமார். இவர் நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் துணை பொதுமேலாளராக பணியாற்றி வருகிறார்.

இவர் நேற்று மாலை தனது காரில் வெளியே சென்று விட்டு வீட்டுக்கு வந்தார். காரை ஷெட்டில் நிறுத்தி விட்டு வீட்டுக்குள் சென்று விட்டார்.

இந்த நிலையில் இரவு 7.30 மணிக்கு திடீரென்று அந்த கார் தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக அவர் தீயணைப்பு துறையினருக்கு தகல் தெரிவித்தார்.

என்.எல்.சி. தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் கார் முற்றிலும் எரிந்து சேதமானது. மின் கசிவு காரணமாக காரில் தீப்பிடித்து இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  #Tamilnews
Tags:    

Similar News