செய்திகள்

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ. உதவியாளர் விபத்தில் பலி

Published On 2018-07-05 19:02 IST   |   Update On 2018-07-05 19:02:00 IST
அரூர் அருகே தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ. உதவியாளர் மோட்டார் சைக்கிள் விபத்தில் பலியானார்.

அரூர்:

தருமபுரி மாவட்டம் அரூரை அடுத்த நம்பிபட்டியை சேர்ந்தவர் தமிழ்மணி (வயது 49) இவர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட அரூர் தொகுதி எம்.எல்.ஏ.வும், தினகரன் ஆதரவாளருமான ஆர்.ஆர்.முருகனிடம் உதவியாளராக பணியாற்றினார்.

நேற்று இரவு வேலை முடிந்து நம்பிபட்டிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். இரவு 10.30 மணிக்கு அரூர் பெரிய ஏரி வளைவு அருகே சென்றபோது ஆத்தூரில் இருந்து கருவேப்பிலை ஏற்றிக் கொண்டு வந்த மினி டெம்போ வேன் மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி தமிழ்மணி பலியானார்.

இந்த விபத்து குறித்து அரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுலேஷ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். விபத்தில் பலியான தமிழ்மணிக்கு சுஜித் என்ற மனைவியும், கார்த்திக் (10) என்ற மகனும், ஹரினிகா (6) என்ற மகளும் உள்ளனர்.

Tags:    

Similar News