செய்திகள்

பெண்ணாடம் அருகே 6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்- பட்டதாரி வாலிபர் கைது

Published On 2018-07-05 10:28 IST   |   Update On 2018-07-05 10:28:00 IST
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே 6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக பட்டதாரி வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பெண்ணாடம்:

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே உள்ள பெரியகொசப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமரேசன் (வயது 27). பட்டதாரியான இவருக்கு திருமணமாகி 2 மாதத்தில் கைக்குழந்தை உள்ளது.

குமரேசன் அங்குள்ள ஒரு நகை கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டின் அருகே 6 வயது சிறுமி விளையாடி கொண்டிருந்தாள். அந்த சிறுமியை குமரேசன் தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.

இது குறித்து அந்த சிறுமி அழுதபடி சென்று தனது பெற்றோரிடம் கூறினாள். உடனே அவளது பெற்றோர் பெண்ணாடம் போலீசில் புகார் செய்தனர்.

போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் இந்த வழக்கை விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றினர். இதைத்தொடர்ந்து விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குமரேசனை ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமிக்கு விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. #Tamilnews
Tags:    

Similar News