செய்திகள்

நேபாளத்தில் மீட்கப்பட்ட 16 பேர் சென்னை திரும்பினர்

Published On 2018-07-05 00:07 GMT   |   Update On 2018-07-05 00:07 GMT
நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் இருந்து மீட்கப்பட்ட தமிழக பக்தர்கள் 16 பேர் நேற்று இரவு சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தனர். #Mansarovar #Pilgrims
சென்னை:

சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியம் தலைமையில் 23 பேர் கடந்த மாதம் நேபாள நாட்டில் உள்ள கைலாய மானசரோவர் யாத்திரை சென்றனர்.

அங்கு பலத்த மழை பெய்ததால் கடுமையான குளிர், நிலச்சரிவு மற்றும் வெள்ளம் ஏற்பட்டது. இதில் குழுவாக சென்றவர்கள் பலரும் சிக்கிக் கொண்டனர். இதனால் சென்னையில் இருந்து சென்றவர்கள் திரும்ப முடியாமல் அவதிப்பட்டனர். அவர்களை மத்திய வெளியுறவுத்துறை மீட்க நடவடிக்கை எடுத்தது.

அதன்படி, நங்கநல்லூர் சுப்பிரமணியம் உள்பட 4 பேர் கடந்த மாதம் 30-ந் தேதி சென்னை திரும்பினர். 7 பெண்கள் உள்பட 19 பேரை மீட்கும் பணியில் தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில், சிறிய ரக விமானங்கள் மூலமாக நேபாள அரசு உதவியுடன் 19 பேர் கொண்ட சென்னை குழுவினர் மீட்கப்பட்டு லக்னோவுக்கு அழைத்து வரப்பட்டனர். இதில் தீனதயாளன் உள்பட 3 பேர் டெல்லி சென்றனர். மீதமுள்ள 16 பேர் லக்னோவில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினர். விமான நிலையத்தில் வந்திறங்கிய அவர்களை உறவினர்கள் கட்டித் தழுவி உற்சாகமாக வரவேற்றனர். #Mansarovar #Pilgrims
Tags:    

Similar News