செய்திகள்

விளையாட்டிலும் மாணவர்கள் ஆர்வம் செலுத்த வேண்டும்: கலெக்டர் அறிவுரை

Published On 2018-07-01 17:32 GMT   |   Update On 2018-07-01 17:32 GMT
முள்ளூர் அரசு உயர் நிலைப்பள்ளியில் கிராம ஊராட்சி விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. இதில் பேசிய கலெக்டர் மாணவர்கள் விளையாட்டில் ஆர்வம் செலுத்த வேண்டும் என்றார்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், முள்ளூர் அரசு உயர் நிலைப்பள்ளி மைதானத்தில் கிராம ஊராட்சி விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. அதனை மாவட்ட கலெக்டர் கணேஷ் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் தெரிவித்ததாவது:-

கிராமங்களில் உள்ள திறமையான விளையாட்டு வீரர்களை கண்டறிந்து அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்து சிறந்த விளையாட்டு வீரர்களாக உருவாக்கும் வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் விளையாட்டுப்போட்டிகள் நடத்த தமிழக முதல்வர் அறிவுறுத்தி  உள்ளார். 

அதன் அடிப்படையில் முள்ளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் கிராம ஊராட்சி விளையாட்டுப் போட்டிகள்  தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களிலும்   2 கட்டங்களாக நடத்தப்பட உள்ளது.  இப்போட்டிகள் 11.7.2018 வரை 2 கட்டமாக நடத்தப்பட உள்ளது. 

மாணவர்களின் எதிர் காலத்தில் வேலை வாய்ப்புகளின் விளையாட்டு பிரிவிற்கென சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறது. கல்வி கற்கும் காலங்களிலேயே மனநலம், உடல் நலத்தை மேம்படுத்தும் விளையாட்டிலும் ஆர்வம் செலுத்த வேண்டும் என்றார்.
Tags:    

Similar News