செய்திகள்

தொழிலில் நஷ்டம்: தனியார் நிறுவன உரிமையாளர் தற்கொலை- மனைவி உயிர் ஊசல்

Published On 2018-07-01 14:16 GMT   |   Update On 2018-07-01 14:16 GMT
கடன் பிரச்சினையால் தனியார் நிறுவன அதிபர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

மேட்டுப்பாளையம்:

கோவை வடவள்ளி மருதமலை சாலையில் உள்ள கல்வீரம் பாளையத்தை சேர்ந்தவர் பிரசன்னா (45). இவரது மனைவி பாக்கியலட்சுமி (40). இவர்களுக்கு விஷாலினி என்ற மகள் உள்ளார். பிரசன்னா காரமடை அருகே உள்ள வெள்ளியங்காடு பகுதியை சேர்ந்த பரமேஸ்வரன் என்பவருக்கு சொந்தமான குடிநீர் சுத்திகரிக்கும் கம்பெனியை குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தார். அவர் தின்னம் பாளையத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் பிரசன்னாவும் அவரது மனைவி பாக்கியலட்சுமியும் நேற்று இரவு வி‌ஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தனர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் காரமடை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து சென்று பார்த்த போது பிரசன்னா இறந்த நிலையில் கிடந்தார். அவரது மனைவி உயிருக்கு போராடிய நிலையில் இருந்தார். அவரை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

அங்கு அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. இது குறித்து காரமடை போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சக்திவேல், சப்-இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தற்கொலை செய்த பிரசன்னா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரசன்னாவுக்கு குடிநீர் சுத்திகரிப்பு தொழிலில் போதிய அனுபவம் இல்லை என கூறப்படுகிறது. இதனால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மேலும் பிரசன்னா பக்க வாதம் நோயாளும் பாதிக்கப்பட்டு உள்ளார். பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணம் ஆகவில்லை. விரக்தியில் இருந்த அவர் மனைவியுடன் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.

பிரசன்னாவின் பெற்றோர் மற்றும் மகள் மதுரையில் உள்ள உறவினர் வீட்டுக்கு அனுப்பி உள்ளனர். அதன் பின்னர் இருவரும் வி‌ஷம் குடித்துள்ளனர். இதில் பிரசன்னா இறந்து விட்டார். பாக்கியலட்சுமி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News