செய்திகள்
மாணவர்கள் போராட்டத்தில் பங்கேற்க வேண்டாம் - போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
திருவண்ணாமலையில் மாணவர்கள் போராட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என்று போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பசுமை வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து திருவண்ணாமலையில் நாளை (1-ந்தேதி) மாணவர்கள் போராட்டம் நடத்தப்போவதாக சமூக வலை தளங்களில் தகவல் பரவியது. இதைதொடர்ந்து, திருவண்ணாமலை போலீஸ்சூப்பிரண்டு அலுவலகத்திற்கு பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களை அழைத்து போலீஸ்சூப்பிரண்டு பொன்னி பேசினார்.
அப்போது, மாணவர்கள் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து சமூக வலைதளங்களில் வரும் தகவல்களை நம்ப வேண்டாம். இந்த தகவலை பரப்பியது யார் என அடையாளம் கண்டு விட்டோம். இந்த தகவலை பரப்பியவர்கள் மாணவர்கள் கிடையாது.
எனவே இந்த போராட்டத்துக்கும், மாணவர்களுக்கும் தொடர்பு இல்லை. போராட்டத்தில் பங்கேற்று படிப்பையும், எதிர்காலத்தையும் கெடுத்துக் கொள்ள வேண்டாம் என எச்சரிக்கை விடுத்தார். #Tamilnews