செய்திகள்

மெரினா கடற்கரையில் போலீஸ்காரரை தாக்கி போதை ஆசாமிகள் 2 பேர் கைது

Published On 2018-06-29 15:40 IST   |   Update On 2018-06-29 15:40:00 IST
மெரினா கடற்கரையில் போலீஸ்காரரை தாக்கி போதை ஆசாமிகள் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை:

மெரினா கடற்கரையில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்காக போலீசார் எப்போதும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வேப்பேரி போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வரும் போலீஸ்காரர் மாரிக் கண்ணன், சக போலீசாருடன் விவேகானந்தர் இல்லம் எதிரில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்.

நேற்று நள்ளிரவில் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் சாலை தடுப்பை தள்ளி விட்டு செல்ல முயன்றனர். அப்போது போலீஸ்காரர் மாரிக்கண்ணன் அதனை தடுத்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த இருவரும் தகாத வார்த்தைகளால் திட்டி மாரிக்கண்ணனை சரமாரியாக தாக்கினர். இதில் அவரது வலது கை பெருவிரலில் முறிவு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து சிகிச்சைக்காக ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட போலீஸ்காரர் மாரிக்கண்ணனுக்கு கையில் மாவு கட்டு போடப்பட்டுள்ளது.

போலீஸ்காரரை தாக்கிய 2 பேரையும் அங்கிருந்த மற்ற போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களது பெயர் விக்னேஷ், மனோஜ்குமார் என்பது தெரிய வந்தது. திருவல்லிக்கேணியை சேர்ந்த அவர்களை போலீசார் கைது செய்தனர். இருவரும் போதையில் இருந்தது தெரிய வந்துள்ளது. #Tamilnews

Tags:    

Similar News