செய்திகள்

மாதவரத்தில் கடன் தொல்லையால் தாய்-மகன் தற்கொலை

Published On 2018-06-29 15:27 IST   |   Update On 2018-06-29 15:27:00 IST
கடன் தொல்லையால் தாய், மகன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டனர். மற்றொரு சம்பவத்தில் இன்ஸ்பெக்டர் மகனும் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மாதவரம்:

சென்னை மாதவரம் பொன்னியம்மன் மேடு சாரங்கபாணி நகரை சேர்ந்தவர் பிரித்விராஜ். இவர் கடந்த ஜனவரி மாதம் உடல்நிலை சரியில்லாமல் இறந்தார். இவரது மனைவி இந்திராணி (வயது 50). இவர்களது மகன் தியாகராஜன் (25). போரூரில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

பிரித்விராஜ் வங்கியில் கடன் வாங்கி இருந்தார். அவர் இறந்துவிட்டதால் வங்கி கடனை அடைக்க வேண்டிய நிலைக்கு இந்திராணி தள்ளப்பட்டார். ஆனால் அவரால் கடன் தொகையை திருப்பி செலுத்த முடியவில்லை.

கடன் தொல்லை அதிகரித்ததால் மனமுடைந்த இந்தி ராணி நேற்று முன்தினம் மதியம் வீட்டில் உள்ள மின் விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்தநிலையில் வேலை முடிந்து மகன் தியாகராஜன் இரவில் வீடு திரும்பினார். மின் விசிறியில் தாயார் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தாயின் பிணத்தை கீழே இறக்கி கட்டிலில் படுக்க வைத்தார். தாய் இறந்த துக்கம் தாங்காமல் அதே மின் விசிறியில் தியாகராஜன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதற்கிடையே நுங்கம்பாக்கத்தில் வசித்து வந்த இந்திராணியின் மகள் உமா தாயாருக்கும், தம்பிக்கும் போன் செய்து பார்த்தார். அவர்கள் போனை எடுக்காததால் அக்கம் பக்கத்தினருக்கு போன் செய்து விசாரித்தார். அவர்கள் வீட்டின் கதவு உள்புறம் பூட்டப்பட்டிருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து அவர் போலீசுக்கு தகவல் கொடுத்து விட்டு வீட்டுக்கு விரைந்தார்.

போலீசார் அங்கு வந்து வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீட்டில் தாய்-மகன் இருவரும் பிணமாக கிடந்தனர். இருவரது பிணத்தையும் போலீசார் மீட்டு ஸ்டான்லி ஆஸ்பத் திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக மாதவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

இதேபோல் சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருபவர் அருள் முருகன். மாதவரம் பால் பண்ணை பவானி நகர் பகுதியில் வசித்து வருகிறார். இவரது மகன் அபிஷேக் (18). ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கல்லூரியில் என் ஜினீயரிங் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

இவர் சரியாக படிக்க வில்லை என்றதால் தந்தை அருள் முருகன் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த அபிஷேக் நேற்று வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மாதவரம் பால் பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News