செய்திகள்
வாழப்பாடி அருகே செல்போன் கடையில் பூட்டை உடைத்து கொள்ளை
செல்போன் கடையில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வாழப்பாடி:
வாழப்பாடியில் உள்ள மங்கம்மாள் நகர் பகுதியை சேர்ந்தவர் இளையராஜா. இவர் தம்மம்பட்டி மெயின் ரோட்டில் உள்ள ஈஸ்வரன் கோவில் அருகே செல்போன் கடை வைத்துள்ளார்.
இவர் வழக்கம் போல் நேற்று இரவு கடையை பூட்டி விட்டு சென்றார். இன்று காலையில் கடையை திறக்க வந்த போது சட்டரில் உள்ள 2 பூட்டு உடைந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
கடையின் உள்ளே சென்று பார்த்த போது கடையில் உள்ள 4 விலை உயர்ந்த செல்போன்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து இளையராஜா வாழப்பாடி போலீசில் புகார் செய்தார். போலீசார் செல்போன் திருட்டு சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.