செய்திகள்

ஆளுநர் மாளிகை முற்றுகை - தி.மு.க. தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் கைது

Published On 2018-06-23 05:44 GMT   |   Update On 2018-06-23 05:44 GMT
நாமக்கல்லில் தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர். #MKStalinArrested #ProtestAgainstGovernor
சென்னை:

தமிழக ஆளுநர் பன்வாரிலால்  புரோகித் நேற்று நாமக்கல் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டார். நாமக்கல் பஸ் நிலையத்தில் இருந்து அவர் காரில் சென்றபோது, அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.வினர் கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக எம்.எல்.ஏ. கே.எஸ்.மூர்த்தி உள்ளிட்ட 293 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த கைது நடவடிக்கையை கண்டிக்கும் வகையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜெ.அன்பழகன், மா.சுப்பிரமணியன், வாகை சந்திரசேகர் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கருப்புக்கொடியுடன் பேரணியாகச் சென்று முற்றுகையிட முயன்றனர். இதனால் அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.



அப்போது பேசிய ஸ்டாலின், மாநில சுயாட்சிக்கு எதிராக செயல்பட்டு வருதால் ஆளுநருக்கு  தொடர்ந்து திமுக கண்டனத்தை தெரிவித்து வருவதாக தெரிவித்தார். அறவழியில் போராடிய தி.மு.க.வினர் திடீரென கைது செய்யப்பட்டதைக் கண்டிக்கும் விதமாக இன்று முற்றுகைப் போராட்டம் நடத்தியதாகவும் கூறினார். #MKStalinArrested #ProtestAgainstGovernor

Tags:    

Similar News