செய்திகள்

சங்கரன்கோவில் அருகே பெண்ணை தாக்கிய தொழிலாளி கைது

Published On 2018-06-22 18:45 IST   |   Update On 2018-06-22 18:45:00 IST
சங்கரன்கோவில் அருகே நிலத் தகராறில் பெண்ணை தாக்கிய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அருகே உள்ள ஆனையூர் காலணி தெருவை சேர்ந்தவர் சுப்பையா. இவரது மனைவி சின்னத்தாய் (வயது 65). இவர்களுக்கு சொந்தமான இடம் ஊருக்கு வெளியே உள்ளது. அந்த இடத்தை அதே ஊரை சேர்ந்த செல்லத்துரை (46) என்பவர் விலைக்கு கேட்டுள்ளார்.

அதற்கு சின்னத்தாய் சம்மதம் தெரிவித்துள்ளார். அதற்கு பின்னர் அந்த இடத்தில் செல்லத்துரை ஆடு வளர்த்து வந்துள்ளார். ஆனால் இடத்தை கிரையம் முடிக்கவும் இல்லையாம், பணத்தையும் கொடுக்கவில்லையாம்.

இது பற்றி பல முறை சின்னத்தாய் செல்லத்துரையிடம் கேட்டு வந்துள்ளார். இந்நிலையில் இடம் சம்பந்தமாக பிரச்சனை 6 மாத காலத்தை கடந்து விட்டது. சம்பவத்தன்று அங்கு சென்ற சின்னத்தாய் தனது இடத்தை விட்டு காலி செய்யுமாறு செல்லத்துரையிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த செல்லத்துரை அருகில் கிடந்த கம்பியை எடுத்து சின்னத்தாயை பலமாக தாக்கியுள்ளார்.

இதில் காயமடைந்த சின்னத்தாய் சங்கரன் கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக சின்னத்தாய் கொடுத்த புகாரின் பேரில் சங்கரன்கோவில் டவுண் போலீசார் வழக்குபதிவு செய்து செல்லத்துரையை கைது செய்தனர்.

Tags:    

Similar News