செய்திகள்

புழல் சிறையில் பாக்ஸர் முரளி கொல்லப்பட்ட விவகாரம் - 2 அதிகாரிகள் பணியிடை நீக்கம்

Published On 2018-06-22 06:09 GMT   |   Update On 2018-06-22 06:09 GMT
புழல் சிறையில் பாக்ஸர் முரளி என்ற கைதி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தலைமை வாடர்ன் உட்பட 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை:

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் பாஸ்கர் முரளி. பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு குற்றவழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே ஒரு முறை முரளி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



இந்நிலையில், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த பாஸ்கர் முரளிக்கும், சக கைதிகளுக்கும் இடையே 2 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற மோதலில் பாஸ்கர் முரளி கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாஸ்கர் முரளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

புழல் சிறையில் நடந்த இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக புழல் சிறை தலைமை வாடர்ன் நாகராஜ் மற்றும் சிறை உதவியாளர் பழனிவேல் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து சிறைத்துறை இன்று உத்தரவிட்டுள்ளது. 
Tags:    

Similar News