செய்திகள்

பெரம்பலூரில் திமுக மகளிரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

Published On 2018-06-21 13:03 GMT   |   Update On 2018-06-21 13:03 GMT
பெரம்பலூரில் மாவட்ட தி.மு.க மகளிரணி, தொண்டரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
பெரம்பலூர்:

பெரம்பலூரில் மாவட்ட தி.மு.க மகளிரணி, தொண்டரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, மகளிரணி மாவட்டச் செயலாளர் மகாதேவி ஜெயபால் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். 

கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சரும், கொள்கை பரப்புச் செயலாளருமான ஆ.ராசா கலந்து கொண்டு பேசியதாவது:  

மகளிரயினர் கட்சிப் பணிகள், சேவைகள், மக்களுக்கு செயல்படுத்தப்பட்ட திட்டங்களை தாய்மார்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். விரைவில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் பெரும் பான்மையான இடங்களில் தி.மு.க வெற்றி பெற பாடுபட வேண்டும் என்றார். 

கூட்டத்தில், மாநில நிர்வாகி துரைசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், நகரச் செயலாளர் பிரபாகரன், ஒன்றியச்  செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, அண்ணாதுரை உள்ளிட்டோர் கலந்து கெண்டனர்.

பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் 108 அவசர ஊர்தி தொழிலாளர் முன்னேற்றச் சங்க பெயர் பலகை திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு தொழிலாளர் முன்னேற்றச் சங்க மாவட்ட கவுன்சில் செயலாளர் ரங்கசாமி தலைமை வகித்தார். முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, பெயர் பலகை திறந்து, கட்சி கொடியேற்றி உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கினார்.
Tags:    

Similar News