செய்திகள்

ஈரானில் சிக்கி தவிக்கும் 21 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை - பிரதமருக்கு, முதல்வர் பழனிசாமி கடிதம்

Published On 2018-06-21 08:30 GMT   |   Update On 2018-06-21 08:30 GMT
ஈரானுக்கு மீன்பிடிக்க சென்று சிக்கிக்கொண்ட தமிழக மீனவர்கள் 21 பேரை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

தமிழகத்தைச் சேர்ந்த 21 மீனவர்கள் ஈரானில் சிக்கி தவித்து வருகிறார்கள். அவர்கள் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பபடாமலும், ஒப்பந்தப்படி மீன் பிடிக்க முடியாமலும் சிக்கி தவிக்கிறார்கள்.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 8 பேர், நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 7 பேர், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 6 பேர் ஆகிய 21 தமிழக மீனவர்களை 3 படகுகளில் மீன் பிடிப்பு பணிக்காக ஈரான் வியாபாரி முகமது சாலா மற்றும் அவரது சகோதரர்கள் அழைத்து சென்று உள்ளனர். அவர்களுக்கு உரிய ஊதியத்தையும் அவர்கள் வழங்கவில்லை.

21 தமிழக மீனவர்களும் உணவு இல்லாமலும், தங்க இடமும் இல்லாமல் சாலைகளில் வசிக்கிறார்கள். அவர்களது பாஸ்போர்ட்டையும் பறிமுதல் செய்து வைத்துள்ளனர்.

எனவே ஈரானில் சிக்கி தவிக்கும் தமிழக மீனவர்கள் 21 பேரை, அங்குள்ள இந்திய தூதரகம் மூலம் உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News