செய்திகள்
மெட்ரோ ரெயில் நிலையங்களில் யோகா- தியானப்பயிற்சி
சர்வதேச யோகா தினத்தையொட்டி 21-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை காலை மற்றும் மாலை நேரங்களில் சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்களில் யோகா மற்றும் தியானப்பயிற்சிகள் நடைபெறுகிறது. #Yoga #Meditation
சென்னை:
சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சர்வதேச யோகா தினத்தையொட்டி 21-ந் தேதி(இன்று) முதல் 24-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) வரை காலை மற்றும் மாலை நேரங்களில் சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்களில் யோகா மற்றும் தியானப்பயிற்சிகள் நடைபெறுகிறது.
இப்பயிற்சிகளை யோகா ஆசான் சுத்தவெளி சபை ஏ.என்.தனசேகரன் நேரில் அளிக்கிறார். இந்த பயிற்சிகளை 3 வயது முதல் 80 வயதுக்கும் மேற்பட்டோர் வரை அனைவரும் எளிதாக செய்யலாம்.
யோகா மற்றும் தியானப்பயிற்சிகள் 21-ந் தேதி(இன்று) காலை 6.30 மணி முதல் ஆலந்தூர், மாலை 6 மணி முதல் எழும்பூர், 22-ந் தேதி காலையில் சைதாப்பேட்டை, மாலையில் டி.எம்.எஸ், 23-ந் தேதி காலையில் வடபழனி, மாலையில் அண்ணாநகர் டவர், 24-ந் தேதி காலையில் திருமங்கலம், மாலையில் செனாய்நகர் மெட்ரோ ரெயில் நிலையங்களில் நடைபெறும்.
தொடர் மெட்ரோ ரெயில் பயணம் உங்கள் பயணத்தை சுகமாக்கும். தொடர் யோகா பயிற்சிகள் உங்கள் உடல்நலனை வலுவாக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Yoga #Meditation #tamilnews