செய்திகள்

ஆதம்பாக்கம் ஏரிக்கரையில் ஆக்கிரமித்து கட்டிய 24 கடைகள் இடிப்பு

Published On 2018-06-18 08:44 GMT   |   Update On 2018-06-18 08:44 GMT
ஆதம்பாக்கத்தில் முதல் கட்டமாக ஏரிக்கரையில் ஆக்கிரமித்து கட்டிய 24 கடைகள் புல்டோசர் மூலம் இடித்து அகற்றப்பட்டது.
ஆலந்தூர்:

ஆதம்பாக்கத்தில் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கரையில் மேடவாக்கம் செல்லும் மெயின் ரோட்டின் ஓரம் நில ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் மற்றும் கடைகள் கட்டப்பட்டுள்ளன.

அவற்றை இடித்து அகற்றப்போவதாக சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீசு அனுப்பப்பட்டது. அதன்படி இன்று காலை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது.

ஆர்.டி.ஓ. சந்திரசேகர் தலைமையில், தாசில்தார் பெனடின் முன்னிலையில் வருவாய் மற்றும் பொதுப்பணித்துறையினர் இப்பணியில் ஈடுபட்டனர்.

இவர்களின் பாதுகாப்புக்காக பரங்கிமலை போலீஸ் துணை கமி‌ஷனர் முத்துசாமி மேற்பார்வையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

முதல் கட்டமாக ஏரிக்கரையில் ஆக்கிரமித்து கட்டிய 24 கடைகள் புல்டோசர் மூலம் இடித்து அகற்றப்பட்டது. மற்றும் வீடுகளை இடிக்கும் பணி இன்னும் ஒரு வாரத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அவர்களுக்கு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடுகள் ஒதுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஆக்கிரமிப்புகளை இடிக்கும் போது அதிகாரிகளுடன் பொது மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. #Tamilnews
Tags:    

Similar News