செய்திகள்

விவசாயிகளுக்கு மானியம் வழங்குவதில் முறைகேடு: பா.ஜனதா குற்றச்சாட்டு

Published On 2018-06-16 13:48 GMT   |   Update On 2018-06-16 13:48 GMT
விவசாயிகளுக்கு மானியம் வழங்குவதில் முறைகேடுகள் நடப்பதாக பா.ஜனதா குற்றம் சாட்டியுள்ளது.

கமுதி:

கமுதி ஒன்றிய பாரதீய ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டம், ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியத்தலைவர் முருகேசன் தலைமையில் மாவட்ட பொதுச் செயலாளர் பொன் ஆறுமுகம் முன்னிலையில் நடைபெற்றது. மகளிரணி நிர்மலா தேவி வரவேற்றுப் பேசினார்.

சிறப்பு அழைப்பாளராக மாநில செயற்குழு உறுப்பினர் துரைக்கண்ணன், மாவட்ட விவசாய அணி தலைவர் கணபதி, கமுதி நகர் தலைவர் முருகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ரவிச்சந்திரன், அழகு மலை, நல்லுச்சாமி, போஸ், ராம்தாஸ் உள்பட ஏராள மானோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கமுதி ஒன்றியத்தில் உள்ள விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு திட்டத்தில் மானியம் வழங்குவதிலும், விவசாய கடன் வழங்குவதிலும் முறைகேடு நடைபெறுகிறது.

விவசாயிகளின் நலனில் வேளாண் மைத்துறை முறையாக சரியாக செயல்படுவது இல்லை.

மேலும் சில தொண்டு நிறுவனங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியத்தை தவறாக பயன்படுத்தப்படுகிறது என பலரும் குற்றம் சாட்டினர்.

இது சம்பந்தமாக துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

முடிவில் ஒன்றிய பொதுச் செயலாளர் வெள்ளைச்சாமி நன்றி கூறினார்.

Tags:    

Similar News