செய்திகள்

திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் மணல் கடத்திய 4 வாகனங்கள் பறிமுதல்

Published On 2018-06-13 10:46 GMT   |   Update On 2018-06-13 10:46 GMT
திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் மணல் கடத்திய 4 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமானூர்:

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகேயுள்ள செம்பியக்குடி பகுதியில் வெங்கனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் சம்பவதன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, செம்பியகுடி சுடுகாட்டு பாதையில் லாரிகளில் பொக்லைன் கொண்டு மணல் அள்ளப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்ற போலீசார், மணல் அள்ள பயன்படுத்தி பொக்லைன் இயந்திரம் மற்றும் 2 லாரிகளை பறிமுதல் செய்தனர்.

மேலும், லாரிகளின் டிரைவர்கள் பெரம்பலூர் மாவட்டம் கவுபாளையம் குமார்(30), கோனேரி பானையம் சின்னதம்பி(22) ஆகியோரை கைது செய்தனர். தப்பியோடிய பொக்லைன் டிரைவரை தேடி வருகின்றனர். இது போன்று தினமும் லாரிகளில் மணல் கடத்தப்படுவதாக பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகேயுள்ள திருமழபாடி சாலையில் திருமானூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லட்சுமிபிரியா தலைமையில் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, அவ்வழியே க.மேட்டுத் தெரு பிரிவு பாதை அருகே வந்த லோடு ஆட்டோவை மறித்து சோதனை செய்த போதுஅந்த லோடு ஆட்டோவில் அனுமதியின்றி கொள்ளிடம் ஆற்றிலிருந்து மணல் ஏற்றி வந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து ஆட்டோவை பறிமுதல் செய்த போலீசார், ஆட்டோவை ஓட்டி வந்த வைத்திய நாதபுரம் மணிகண்டன்(30) என்பவரை கைது செய்து ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News