செய்திகள்

நாசரேத் அருகே பஸ் சக்கரத்தில் சிக்கி மூதாட்டி பலி

Published On 2018-06-13 15:07 IST   |   Update On 2018-06-13 15:07:00 IST
பஸ் சக்கரத்தில் சிக்கி மூதாட்டி இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாசரேத்:

நாசரேத் அருகே உள்ள நல்லான்விளை தெற்கு தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மனைவி முத்துக்கிளி (வயது 75) இவர் தனக்கு மாத்திரை வாங்குவதற்காக நேற்று மூக்குப்பீறி அரசு மருத்துவமனைக்கு சென்றார்.

பின்னர் மாத்திரை வாங்கி விட்டு பஸ்சுக்காக காத்திருந்தபோது உவரியில் இருந்து நாசரேத் வழியாக தூத்துக்குடிக்கு சென்ற அரசு பஸ் மூக்குப்பீறி அரசு மருத்துவமனை பஸ் நிறுத்தத்தில் பஸ்சை எடுத்த போது எதிர்பாராதவிதமாக பஸ்சின் சக்கரத்தில் சிக்கி முத்துக்கிளி சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நாசரேத் இன்ஸ்பெக்டர் ராஜ் பலியான முத்துக்கிளி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். சப்-இன்ஸ்பெக்டர் துரை வழக்கு பதிவு செய்து பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் பண்டாரவிளையை சேர்ந்த லிங்கபாண்டி (33) என்பவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த வாரம் நடைபெறும் எனது மகள் திருமணத்துக்கு எனது தாய் கலந்து கொள்ளமுடியாமல் போய் விட்டதே என்று மகன் முருகேசன் ஏங்கி அழுத காட்சி பார்போர் கண்களை கலங்க செய்தது.

Tags:    

Similar News