செய்திகள்

ராஜபாளையம் அருகே புகையிலை-மது பாட்டில்கள் பறிமுதல்: 6 பேர் கைது

Published On 2018-06-10 13:59 GMT   |   Update On 2018-06-10 13:59 GMT
தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் திருட்டுத்தனமாக மதுவிற்ற 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

ராஜபாளையம்:

விருதுநகர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், திருட்டு மது விற்பனை நடைபெறுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜ ராஜனுக்கு தகவல் கிடைத்தது.

அவரது உத்தரவின் பேரில் ராஜபாளையம் சரகத்தில் துணை சூப்பிரண்டு ரவிச்சந்திரன் மேற்பார்வையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

தெற்கு போலீஸ் இன்ஸ் பெக்டர் பவுல்ஏசுதாஸ், சப்-இன்ஸ்பெக்டர்கள் அருண்குமார், மூவேந்திரன், திருமலைராஜா மற்றும் போலீசார் ரோந்து சென்றபோது சங்கரன் கோவில் முக்கு பகுதியில் உள்ள கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்ததோடு, கடை உரிமையாளர் முருகனையும் கைது செய்தனர்.

இதேபோல் அக்னி, சரவணன் (48) ஆகியோரும் புகையிலை பொருட்கள் விற்றதாக கைது செய்யப்பட்டனர்.

சேத்தூர் புறக்காவல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமசாமி தலைமையிலான போலீசார் ரோந்து சென்றபோது சுந்தர் ராஜபுரம் பகுதியில் ஒரு கடையில் திருட்டுத்தனமாக மது விற்கப்படுவது தெரிய வந்தது. அதனை விற்றதாக போதராஜ் (40) என்பவரை கைது செய்த போலீசார் 20 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

தளவாய்புரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பெருமள்சாமி, ரெங்கன் மற்றும் போலீசார் முறம்பு பகுதியில் மது விற்றதாக நாகராஜ் (27) என்பவரையும் சேத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ், சொக்கநாதன் புத்தூர் பகுதியில் மாரிமுத்து (29) என்பவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

Similar News