செய்திகள்

மானாமதுரையில் மகளிர் காங்கிரஸ் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

Published On 2018-06-07 10:15 GMT   |   Update On 2018-06-07 10:15 GMT
மானாமதுரையில் காங்கிரஸ் மகளிர் பிரிவு சார்பில் பேரூராட்சி அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மானாமதுரை:

மத்திய அரசின் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் விலை உயர்வு, முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ளது போன்ற நட வடிக்கைகளைக் கண்டித்தும், மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கையை எதிர்த்தும் மகளிர் காங்கிரஸ் அமைப்பினர் மானாமதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த முடியாத மாநில அரசைக் கண்டித்தும் கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

மகளிர் பிரிவு மாநில பொதுச் செயலாளர் வித்யா கணபதி தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகி செந்தாமரை, பாண்டியம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர், காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு மாநில துணைத் தலைவர் டாக்டர் எஸ்.செல்வராஜ், மாவட்ட நிர்வாகி ரமேஷ்கண்ணா, மாநில பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசினர்.

காங்கிரஸ் கிழக்கு வட்டாரத் தலைவர் ஆரோக்கிய தாஸ், மாவட்ட பொதுச் செயலாளர் பிரேம சந்திரன், நிர்வாகிகள் புருஷோத்தம்மன், காசி மற்றும் பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். இவர்கள் மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகளைக் கண்டித்து கோ‌ஷம் எழுப்பினர். முடிவில் மேனகப்பிரியா நன்றி கூறினார்

Tags:    

Similar News