செய்திகள்

ஆண்டிப்பட்டி அருகே கேலி- கிண்டலை தட்டி கேட்ட பெண் மீது தாக்குதல்

Published On 2018-06-06 17:54 IST   |   Update On 2018-06-06 17:54:00 IST
ஆண்டிப்பட்டி அருகே கேலி- கிண்டலை தட்டிக் கேட்ட பெண் தாக்கப்பட்டது குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபரை கைது செய்தனர்.

ஆண்டிப்பட்டி:

ஆண்டிப்பட்டி அருகே குமணன்தொழுவை சேர்ந்தவர் மணி மனைவி மகாலட்சுமி (வயது36). இவரை அதே பகுதியை சேர்ந்த அருண்குமார் என்பவர் அடிக்கடி கேலி- கிண்டல் செய்து வந்துள்ளார்

இதனால் ஆத்திரம் அடைந்த மகாலட்சுமி, அருண்குமாரை தட்டி கேட்டுள்ளார். மேலும் இது குறித்து அருண்குமாரின் தந்தையிடம் தெரிவித்துள்ளார். இதனால் தந்தை அவரை கண்டித்துள்ளார்.

மகாலட்சுமி தனது கணவருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அருண்குமார் எதற்கு எனது தந்தையிடம் புகார் கூறினாய் என கேட்டு அவரை கடுமையாக தாக்கி உள்ளார். இதனை தடுக்க வந்த மணிக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து மயிலாடும்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண்குமாரை கைது செய்தனர்.

Tags:    

Similar News