செய்திகள்
திருச்சி விமான நிலையத்தில் பயணியிடம் ரூ.2 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்
திருச்சி விமான நிலையத்துக்கு ஷார்ஜாவில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் கடத்தி வந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
கே.கே.நகர்:
திருச்சி விமான நிலையத்திற்கு நேற்றிரவு ஷார்ஜாவில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது சென்னையை சேர்ந்த அருண் என்பவரின் உடைமைகளை சோதனை செய்த போது அவர் ரூ.2.32 லட்சம் மதிப்புள்ள 75 கிராம் தங்கத்தை செயினாக செய்து மறைத்து எடுத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அருணிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி விமான நிலையம் வழியாக தங்கம் கடத்தப்படும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. இந்தநிலையில் சென்னை பயணியிடம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.