செய்திகள்

மாணவர்களிடம் பஸ் கட்டணம் வசூலிக்க கூடாது- போக்குவரத்து அதிகாரி அறிவிப்பு

Published On 2018-06-01 04:51 GMT   |   Update On 2018-06-01 04:51 GMT
புதிய பஸ் பாஸ் வழங்கப்படும் வரை மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று போக்குவரத்து அதிகாரி தெரிவித்துள்ளார். #BusPass

சென்னை, ஜூன். 1-

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப் பட்டுள்ளன.

பள்ளிகள் திறக்கும் போது மாணவர்களுக்கு உடனடியாக புதிய பஸ் பாஸ் கிடைக்காது. பழைய பஸ் பாஸ்களை காண்பித்துதான் பயணம் செய்ய வேண்டும்.

இது தொடர்பாக அரசு போக்குவரத்து கழக அதி காரிகளிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது:-

அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் ஆண்டு தோறும் முதல் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் விரைவாக பஸ் பாஸ் வழங்க ஏற்பாடு செய்து வருகிறோம்.

பள்ளிகளில் இருந்து மாணவர்களின் முழு விவரங்கள் வந்தவுடன் பஸ் பாஸ் வழங்கிவிடுவோம்.

எனவே புதிய பஸ் பாஸ் கிடைக்கும் வரை பழைய பயண அட்டையை காண்பித்து பயணம் செய்யலாம். அல்லது பள்ளி சீருடை அணிந்திருக்க வேண்டும். அவர்களிடம் கட்டணம் எதுவும் கேட்க கூடாது என்று அறிவுறுத்தப் பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News