செய்திகள்

சிவகங்கை சம்பவத்தை கண்டித்து திருச்சியில் புதிய தமிழகம் கட்சி ஆர்ப்பாட்டம்

Published On 2018-05-31 13:48 GMT   |   Update On 2018-05-31 13:48 GMT
திருச்சியில் இன்று புதிய தமிழகம் சார்பில் 2 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி:

சிவகங்கை  மாவட்டத்தில் தலித் சமுதாயத்தை  சேர்ந்தவர்  2  பேர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து இன்று காலை திருச்சி சமயபுரம் அருகே உள்ள நெ.1 டோல்கேட்டில் புதிய தமிழகம் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட செயலாளர் ஐயப்பன் தலைமை தாங்கினார்.

இதில் நிர்வாகிகள் கூத்தூர் பாலு,  அசோக்,  நம்பிராஜ், அசாக்குமார் உள்பட 100-க் கும்  மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் புதிய தமிழகம் கட்சியினர் கலைந்து செல்லாமல் தொடர்ந்து  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீசுக்கும், ஆர்ப்பாட்டகாரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்ட டோரை கைது செய்தனர்.  

இதேபோல் திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அண்ணா சிலை அருகே திருச்சி தெற்கு மாவட்ட புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு மாவட்ட செயலாளர் வக்கீல் சங்கர் தலைமை தாங்கினார். இதில் புதிய தமிழகம் கட்சியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News