செய்திகள்

ஆரணி அருகே பெண் என்ஜினீயர் மாயம்

Published On 2018-05-30 21:33 IST   |   Update On 2018-05-30 21:33:00 IST
ஆரணி அருகே வீட்டில் இருந்த பெண் என்ஜினீயர் மாயமானது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் தெரிவித்துள்ளார். போலீசார் பெண் என்ஜினீயரை வலைவீசி தேடி வருகின்றனர்.
பெரியபாளையம்:

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் ஆரணி அருகே உள்ள காரணி கிராமம் போலாட்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தினகரன் (வயது 48) விவசாயி ஆவார். இவரது மூத்த மகள் கம்யூட்டர் என்ஜினீயர் கவிதா (வயது 23) ஆவார்.

தச்சூர்கூட்டுச்சாலையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், நேற்று காலை தினகரன் தனது மனைவியுடன் வயல்வெளிக்கு சென்றார். வீட்டில் கவிதா மற்றும் தினகரனின் இளைய மகள் கீர்த்தனா மட்டும் இருந்தனர். மாலை வீடு திரும்பிய போது வீட்டில் இருந்த கவிதாவை காணாவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கவிதாவை கண்டு பிடிக்க முடியவில்லை. இதனால் காணாமல்போன தனது மகளை கண்டு பிடித்து தருமாறு தினகரன் ஆரணி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.  

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியமூர்த்தி தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன பெண் என்ஜினீயரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும், பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து  வருகின்றனர்.  வீட்டில் இருந்த பெண் என்ஜினியர் காணாமல் போன சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News