செய்திகள்

வில்லிவாக்கத்தில் தலையில் இரும்பு குண்டு விழுந்தது - உடற்பயிற்சி கூடத்தில் பள்ளி மாணவர் பலி

Published On 2018-05-30 15:09 IST   |   Update On 2018-05-30 15:09:00 IST
வில்லிவாக்கத்தில் தலையில் இரும்பு குண்டு விழுந்து உடற்பயிற்சி கூடத்தில் பள்ளி மாணவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அம்பத்தூர்:

வில்லிவாக்கம் அகத்தியர் நகர் 34-வது தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ். பாடியில் உள்ள மின் வாரிய அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இவரது மகன் மோகன சுந்தரம் (வயது15). வில்லிவாக்கம் சிட்கோ நகரில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு முடித்திருந்தார். இறுதித் தேர்வில் 427 மதிப்பெண் வாங்கி இருந்தார்.

மோகனசுந்தரம் கடந்த 2 வாரமாக வில்லிவாக்கத்தில் உள்ள தனியார் உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி செய்து வந்தார்.

நேற்று இரவு 8 மணியளவில் அவர் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது வலுதூக்கும் குண்டு அவரது தலையில் விழுந்தது. இதில் காயம் அடைந்த அவரை உடற்பயிற்சி கூட உரிமையாளர் வினோத்குமார் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். அங்கு சிகிச்சை பலனின்றி மோகனசுந்தரம் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து வில்லிவாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சையத்கமால், சப்- இன்ஸ்பெக்டர் சத்தியபாமா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து உடற்பயிற்சி கூட உரிமையாளர் வினோத் குமாரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News