செய்திகள்
உவரி கடற்கரையில் நாட்டு படகுகள் நிறுத்தப்பட்டுள்ளது

துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து நெல்லை மாவட்டத்தில் 4-வது நாளாக 7 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

Published On 2018-05-26 08:22 GMT   |   Update On 2018-05-26 08:22 GMT
துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து நெல்லை மாவட்ட மீனவ கிராமமான உவரி, கூட்டப்பனை, கூடுதாழை, இடிந்தகரை, கூத்தன்குழி, பெருமணல் உள்பட10 மீனவ கிராமங்களை சேர்ந்த 7 ஆயிரம் கடலுக்கு செல்லவில்லை. #SterliteProtest
திசையன்விளை:

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கோரி தொடர் போராட்டம் நடத்தி வந்தவர்கள் போராட்டத்தின் 100-வது நாளான கடந்த 22-ந் தேதி தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு கொடுக்க சென்றனர்.

இதில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேரி பலியாகினர். இதை கண்டித்து நெல்லை மாவட்டத்தில் சேர்ந்த 7 ஆயிரம் சாட்டு படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் 4-வது நாளாக தொடர்ந்து இன்றும் அவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

இதனால் நெல்லை மாவட்ட மீனவ கிராமமான உவரி, கூட்டப்பனை, கூடுதாழை, இடிந்தகரை, கூத்தன்குழி, பெருமணல் உள்பட10 மீனவ கிராமங்களை சேர்ந்த 7 ஆயிரம் கடலுக்கு செல்லவில்லை. இதனால் கடற்கரையில் 2 ஆயிரம் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. உவரி கடற்கரையில் மட்டும் 200 நாட்டு படகுகள் நிறுத்தப்பட்டுள்ளது. #SterliteProtest
Tags:    

Similar News