செய்திகள்

தூத்துக்குடியில் இணைய சேவையை சீரமைப்பது குறித்து நாளைக்குள் முடிவெடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

Published On 2018-05-25 20:21 IST   |   Update On 2018-05-25 20:21:00 IST
துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து தூத்துக்குடியில் நிறுத்தப்பட்டுள்ள இணையதள சேவை வழங்குவது தொடர்பாக நாளைக்குள் ஆய்வு செய்து முடிவுவெடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. #ThoothukudiPoliceFiring #SterliteKillings #Internetservicescutdown

மதுரை:

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியானதை தொடர்ந்து தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் வதந்திகள் பரவாமல் இருக்க இணையதளச் சேவைகளை முடக்கிவைத்து உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடந்த இருநாட்களாக முடக்கி வைக்கப்பட்டிருந்த இணையதளச் சேவை இன்று மாலை முதல் மீண்டும் செயல்பட தொடங்கியது. எனினும், தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் இணையச்சேவைக்கான தடை இன்னும் நடைமுறையில் உள்ளது.

இந்நிலையில், தூத்துக்குடியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இணையதள சேவை வழங்குவது தொடர்பாக நாளைக்குள் ஆய்வு செய்து முடிவுவெடுக்க மறுசீராய்வு ஆணையத்துக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மேலும் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களின் சிகிச்சை செலவை அரசே ஏற்க வேண்டும் எனவும், காயமடைந்தவர்களை மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு அல்லது தனியார் மருத்துவமனைகளில் சேர்க்க வேண்டும் எனவும் அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

போராட்டத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறதா என்பதை சட்ட உதவிக்குழு நேரில் ஆய்வு செய்து ஜூன் 6 ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. #ThoothukudiPoliceFiring #SterliteKillings #Internetservicescutdown 
Tags:    

Similar News