செய்திகள்

கோவையில் பெண் என்ஜினீயர் தற்கொலை- போலீசார் விசாரணை

Published On 2018-05-24 17:22 IST   |   Update On 2018-05-24 17:22:00 IST
கோவையில் பெண் என்ஜினீயர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:

கோவை சுந்தராபுரம் கல்லுக்குழி 2-வது வீதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகள் இந்துமதி (26) என்ஜினீயரிங் பட்டதாரி. சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

இவர் கடந்த 6 மாதத்திற்கு மேல் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இன்று காலை இந்துமதி படுத்து இருந்த அறை உள்பக்கம் பூட்டப்பட்டு இருந்தது. அவரை தாய் கதவை தட்டினார். ஆனால் திறக்கப்படவில்லை. இதனால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

அப்போது இந்துமதி தனது துப்பட்டாவால் மின் விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து போத்தனூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அங்கு விரைந்து சென்றனர். இந்துமதி அறையை சோதனை செய்த போது அங்கு அவர் எ ழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியது.

அதில் இந்து மதி எனது சாவுக்கு யாரும் காரணம் அல்ல. நானாகவே இந்த முடிவை எடுத்து கொண்டேன். குடும்பத்தினர் என்னை மிகவும் நேசித்தனர். இந்த முடிவு எடுத்ததற்காக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். குடும்பத்தினர் எனக்காக நிறைய தியாகம் செய்து உள்ளனர். அவர்களை நேசிக்கிறேன் என எழுதப்பட்டு இருந்தது. இந்துமதி தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews
Tags:    

Similar News