உள்ளூர் செய்திகள்
null

சென்னை ஓபன் பட்டத்தைக் கைப்பற்றிய மகிபால் சிங்

Published On 2025-12-01 13:47 IST   |   Update On 2025-12-01 21:24:00 IST
  • அரையிறுதிப் போட்டியில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்தபெனிகோபால் லஹோட்டி, ஆனந்த் பாபுவை (223-191) எளிதாக வென்றார்.
  • 10 மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 95 போலிம் வீரர்கள் கலந்து கொண்டனர்.

2-வது சென்னை ஓபன் டென்பின் போலிம்சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில், இரண்டாம்சீட் பெனிகோபால் எல்., முதல் சீட் மகிபால் சிங்குக்கு எதிராக முதல் பந்தயத்தை (208-194) வென்றார், இதனால்வெற்றியாளரை தீர்மானிக்க இரண்டாவது பந்தயம் ஆடப்பட்டது.

இரண்டாவது பந்தயத்தில், மகிபால் மூன்று தொடர் ஸ்ட்ரைக்குகளுடன் தொடங்கி 200 பின்ஃபால் எடுத்தார். அதேநேரம் பெனிகோபால் 168 ரன்களே எடுத்தார். இதன்மூலம் மகிபால் சாம்பியனாகத் திகழ்ந்தார். இதற்கு முன்னர், ஸ்டெப்லேடர் சுற்றின் முதல் போட்டியில், மூன்றாம் சீட் ஆனந்த் பாபு (தமிழ்நாடு), நான்காம் சீட் நவீன்சித்தம் (தெலுங்கானா) ஆகியோரை (222–183) வீழ்த்தினார்.

அரையிறுதிப் போட்டியில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்தபெனிகோபால் லஹோட்டி, ஆனந்த் பாபுவை (223-191) எளிதாக வென்றார்.

இரட்டையர் பிரிவின் இறுதி சுற்றில் கிஷன் ஆர் அடித்த ஒருஸ்ட்ரைக், கர்நாடக குழுவிற்கு (351-350) பட்ட வெற்றியை நிச்சயித்தது.

10 மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 95 போலிம் வீரர்கள் கலந்து கொண்ட இந்த சாம்பியன்ஷிப்,  பன்னிரண்டு நாட்கள் உயர் மின்னழுத்த போலிம் நிகழ்வுகளைக்கொண்டு இருந்தது.

Tags:    

Similar News