செய்திகள்

மதுரை அருகே பெட்ரோல் போட்டுவிட்டு பணம் கொடுக்காமல் சென்ற வாலிபர்கள் கைது

Published On 2018-05-23 16:04 IST   |   Update On 2018-05-23 16:04:00 IST
மதுரை அருகே பெட்ரோல் போட்டுவிட்டு பணம் கொடுக்காமல் சென்ற வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை:

மதுரை எச்.எம்.எஸ். காலனியைச் சேர்ந்தவர் பழனிக்குமார் (வயது 37). இவர் ஒத்தக்கடையில் உள்ள பெட்ரோல் பங்க்கில் மேலாளராக இருந்து வருகிறார்.

நேற்று இந்த பெட்ரோல் பங்க்கில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் ரூ. 1,340-க்கு பெட்ரோல் போட்டனர். பெட்ரோல் போட்டதும் பணம் கொடுக்காமல் அங்கிருந்து தப்ப முயன்றனர்.

உடனே பழனிக்குமார் மற்றும் ஊழியர்கள் அவர்களை மடக்கிப்பிடித்து பணத்தை கேட்டனர். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

இது குறித்து பழனிக் குமார் ஒத்தக்கடை போலீசில் புகார் செய்தார். போலீசார் விரைந்து வந்து பெட்ரோலுக்கு பணம் கொடுக்காத 2 பேரையும் கைது செய்தனர்.

விசாரணையில் அவர்கள் ஓடைப்பட்டியைச் சேர்ந்த பொன் தனுஷ் (16), வைரமணி (17) என்பது தெரியவந்தது.

Tags:    

Similar News