செய்திகள்

எடியூரப்பா ராஜினாமா, பொம்மை கவிழ்ந்து உடைந்து விட்டது - ப.சிதம்பரம் கருத்து

Published On 2018-05-20 04:39 GMT   |   Update On 2018-05-20 04:39 GMT
கர்நாடகாவில் பாவம், பொம்மை கவிழ்ந்து உடைந்து விட்டது என்று எடியூரப்பா ராஜினாமா குறித்து முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். #KarnatakaElection2018 #KarnatakaFloorTest #PChidambaram
சென்னை:

கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. 104 தொகுதிகளில் வென்ற பாரதிய ஜனதா சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தரவிடப்பட்டது.

நேற்று சட்டசபையில் மெஜாரிட்டி நிரூபிக்க நம்பிக்கை ஓட்டெடுப்பு நடப்பதற்கு முன்பே எடியூரப்பா ராஜினாமா செய்தார். அதனால் பாரதிய ஜனதா அரசு 3 நாளில் முடிவுக்கு வந்தது.

கர்நாடக மாநில தேர்தல் விவகாரம் குறித்து காங்கிரஸ் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் தொடர்ந்து கருத்து பதிவு செய்து வந்தார்.

கவர்னருக்கு எழுதிய கடிதத்தில் தனக்கு எத்தனை உறுப்பினர்களின் ஆதரவு என்று கூட எடியூரப்பா குறிப்பிடவில்லை. ஆனால் அவருக்கு முதல்-மந்திரி பதவி ஏற்க அழைப்பு, நம்பிக்கை வாக்கெடுப்பை தவிர்ப்பதற்காக எத்தன வித்தைகள் பாரீர்! 15 நாள் அவகாசம், ரகசிய வாக்கெடுப்பு, கைப்பாவை தற்காலிக சபாநாயகர், இன்னும் எத்தனையோ? என்று ப.சிதம்பரம் கருத்து கூறி வந்தார்.

எடியூரப்பா ராஜினாமா குறித்து ப.சிதம்பரம் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள கருத்து வருமாறு:-


கர்நாடக மாநிலத்தில், பாவம், பொம்மை கவிழ்ந்து விழுந்து உடைந்தது. ஆனால் பொம்பலாட்டக்காரன்கள் ஓடி ஒளிந்து கொண்டார்கள். ஜனநாயகம் பிழைத்தது என்று மகிழ்ச்சி அடைவோம் என்று தெரிவித்துள்ளார். #KarnatakaElection2018 #KarnatakaFloorTest #PChidambaram #BSYeddyurappa
Tags:    

Similar News