செய்திகள்

திருத்தணி அருகே அகத்தீஸ்வரர் கோவிலில் ஐம்பொன் சிலைகள் கொள்ளை

Published On 2018-05-18 07:45 GMT   |   Update On 2018-05-18 07:45 GMT
திருத்தணி அருகே அகத்தீஸ்வரர் கோவிலில் உள்ள ஈஸ்வரர் சிலை மற்றும் 2½ அடி உயரம் உள்ள பார்வதி சிலையை மர்ம கும்பல் கொள்ளையடித்து தப்பி சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளிப்பட்டு:

திருத்தணியை அடுத்த பொதட்டூர்பேட்டையில் பழமையான அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. நேற்று இரவு பூஜை முடிந்து கோவிலை பூசாரி பூட்டிச் சென்றார்.

நள்ளிரவில் வந்த மர்ம கும்பல் கோவில் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அங்கிருந்து ஐம்பொன்னால் ஆன சுமார் 3 அடி உயரம் உள்ள ஈஸ்வரர் சிலை மற்றும் 2½ அடி உயரம் உள்ள பார்வதி சிலையை கொள்ளையடித்து தப்பி சென்று விட்டனர்.

இன்று அதிகாலை கோவிலுக்கு வந்த பூசாரி ஐம்பொன் சிலைகள் கொள்ளை போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து பொதட்டூர் பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டி.எஸ்.பி. சேகர் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

கோவிலுக்கு வந்த கொள்ளை கும்பல் ஐம்பொன் சிலைகளை மட்டும் தூக்கிச் சென்று உள்ளனர். எனவே மர்ம கும்பல் திட்டமிட்டு கைவரிசை காட்டி இருப்பது தெரிந்தது. கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.#tamilnews
Tags:    

Similar News