செய்திகள்

பிளஸ்-2 தேர்வு முடிவு- புதுவையில் 87 சதவீத மாணவர்கள் தேர்ச்சி

Published On 2018-05-16 09:26 GMT   |   Update On 2018-05-16 09:26 GMT
தமிழகம் மற்றும் புதுவையில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. புதுவையில் 87.32 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
புதுச்சேரி:

தமிழ்நாடு, புதுவையில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன.

புதுவை மாநில தேர்வு முடிவுகளை முதல்-அமைச்சர் நாராயணசாமி வெளியிட்டார்.

பிளஸ் 2 பொதுத்தேர்வில் புதுவை, காரைக்கால் பகுதியை சேர்ந்த 6,987 மாணவர்களும், 8,088 மாணவிகளும் என மொத்தம் 15,075 மாணவர்கள் தேர்வு எழுதினர்.

தேர்வு முடிவுகளின்படி அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயின்ற 13,163 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்கள் 5,242, மாணவிகள் 7,321 ஆகும். தேர்ச்சி விகிதம் 87.32. இது கடந்த ஆண்டைவிட 0.64 சதவீதம் அதிகம்.

புதுவை, காரைக்காலில் அரசு பள்ளியில் 6,668 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் 4,918 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி வீதம் 73.76 சதவீதமாகும். தனியார் பள்ளிகளில் 8,407 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் 8245 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி வீதம் 98.07 சதவீதமாகும்.

புதுவை பகுதியில் அரசு பள்ளிகளில் தேர்வு எழுதிய 5,270 மாணவர்களில் 3857 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி வீதம் 73.19 சதவீதமாகும். தனியார் பள்ளிகளில் 7,495 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் 7,388 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி வீதம் 98.57 சதவீதமாகும்.

காரைக்கால் பகுதியில் அரசு பள்ளிகளில் தேர்வு எழுதிய 1,398 மாணவர்களில் 1,061 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி வீதம் 75.89 சதவீதமாகும். தனியார் பள்ளிகளில் தேர்வு எழுதிய 912 மாணவர்களில் 857 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி வீதம் 93.97 சதவீதமாகும். புதுவை, காரைக்கால் பகுதிகளில் 87.32 சதவீதம் மாணவர்களும், புதுவை பகுதியில் 88.09 சதவீத மாணவர்களும், காரைக்காலில் 83.03 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

புதுவை பகுதியில் அரசு பள்ளிகளில் மாணவர் தேர்ச்சி வீதம் கடந்த ஆண்டை விட 0.51 சதவீதம் குறைவாகும். அதேநேரத்தில் காரைக்காலில் 2.19 சதவீதம் அதிகமாகும்.

புதுவை, காரைக்காலில் 51 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. அரசு பள்ளிகளில் பாகூர் கொரவள்ளிமேடு பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. அரசு, தனியார் பள்ளிகளில் வேதியியல் பாடத்தில் 4 மாணவர்களும், கணிப்பொறி அறிவியலில் 19, கணக்கு 29, பொருளியல் 7, வணிகவியல் 111, கணக்கு பதிவியல் 150, வணிக கணிதம் 7 என ஆக மொத்தம் 327 மாணவர்கள் 200-க்கு 200 மதிப்பெண் பெற்றுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது கல்வி அமைச்சர் கமலக்கண்ணன், கல்வித்துறை செயலர் அன்பரசு, இயக்குனர் குமார், இணை இயக்குனர் சோம சுந்தரம் ஆகியோர் உடனிருந்தனர்.
Tags:    

Similar News