செய்திகள்

பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானது- 91.1 சதவீத மாணவ மாணவிகள் தேர்ச்சி

Published On 2018-05-16 04:11 GMT   |   Update On 2018-05-16 04:11 GMT
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை இணையதளங்களில் அறிந்துகொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. #Plus2Result #HSCResult #+2Result
சென்னை:

தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் ஏப்ரல் 6-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் மொத்தம் 8 லட்சத்து 66,934 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியுள்ளனர். விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்த நிலையில், இன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. காலை 9.30 மணிக்கு சென்னை டிபிஐ வளாகத்தில் அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசந்தராதேவி, தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.

தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, ww.dge2.tn.nic.in ஆகிய இணைய தளங்களில் மாணவர்கள் அறிந்துகொள்ளலாம்.

மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்பட்டுள்ளது. தனித்தேர்வர்களுக்கும், ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி எண்ணிற்கு தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டுள்ளது.


இந்த ஆண்டு 91.1 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட ஒரு சதவீதம் குறைவு ஆகும்.  இந்த ஆண்டும் மாணவிகளே அதிக அளவில் (94.1 சதவீதம்) தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களில் 87.7 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 1907 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.

கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் ரேங்க் பட்டியல் வெளியிடப்படவில்லை என்பது குறிப்படத்தக்கது. #Plus2Result #HSCResult #+2Result 
Tags:    

Similar News