செய்திகள்

மணல் லாரி மோதி விவசாயி பலி

Published On 2018-05-13 21:33 IST   |   Update On 2018-05-13 21:33:00 IST
மோட்டார் சைக்கிள் மீது மணல் லாரி மோதிய விபத்தில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து மோகனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே பரளி அனியாளம்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் சின்னுசாமி (வயது 60). விவசாயி. இவர் நேற்று இரவு சுமார் 9 மணி அளவில் வளையப்பட்டியில் இருந்து வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது பின்னால் அதிவேகமாக வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் சின்னுசாமி பலத்த காயம் அடைந்தார். அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வாகனத்தில் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சின்னுசாமியை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து மோகனூர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சுகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

விபத்து ஏற்பட்டதும் லாரி டிரைவர் லாரியை நிறுத்தி விட்டு அங்கிருந்து ஓடி விட்டார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என தெரியவில்லை. லாரி பதிவு எண்ணை வைத்து டிரைவர் யார்? என்பதை கண்டுபிடிக்கும் முயற்சில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News