செய்திகள்

தரகம்பட்டி அருகே வெறிநாய் கடித்து 8 செம்மறி ஆடுகள் பலி

Published On 2018-05-10 22:20 IST   |   Update On 2018-05-10 22:20:00 IST
தரகம்பட்டி அருகே வெறிநாய் கடித்ததில் 8 செம்மறி ஆடுகள் பலியாகின.
தரகம்பட்டி:

கரூர் மாவட்டம் தரகம்பட்டி அருகே மேலப்பகுதி ஊராட்சி மாலப்பட்டியைச் சேர்ந்தவர் ராசு (வயது 50). கொத்தனாரான இவர் 50-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளும் வளர்த்து வருகிறார். நேற்று முன் தினம் ஆடுகளை மேய்த்துவிட்டு தனது தோட்டத்தில் உள்ள பட்டியில் அடைத்துவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார்.

மறுநாள் காலை வந்து பார்த்தபோது, படுகாயங்களுடன் 8 செம்மறிஆடுகள் இறந்து கிடந்தன. 6 செம்மறி ஆடுகள் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக காணியாளம்பட்டி கால்நடை மருத்துவரை வரவழைத்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த செம்மறி ஆடுகளுக்கு சிகிச்சை அளித்தார்.

அந்த செம்மறி ஆடுகள் வெறிநாய் கடித்ததால்தான் இறந்துள்ளன என டாக்டரின் பரிசோதனையில் தெரியவந்தது. மேலும் கிராம நிர்வாக அதிகாரி மணிவேல் நேரில் சென்று விசாரணை நடத்தினார். இது தொடர்பாக பொதுமக்கள் கூறும்போது, இந்த பகுதியில் உள்ள வெறிநாய்களை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர். 
Tags:    

Similar News