செய்திகள்

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் 3 மாதமாக மின் உற்பத்தி பாதிப்பு

Published On 2018-05-04 10:06 GMT   |   Update On 2018-05-04 10:06 GMT
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் 3 மாதங்கள் ஆகியும் நீர்க் கசிவை அதிகாரிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

மாமல்லபுரம்:

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் உள்ள 2 அணு உலையில் தலா 220 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.

முதல் உலையின் ரியாக்டரில் கடந்த ஜனவரி 31-ந் தேதி நீர்க்கசிவு ஏற்பட்டதால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

இதை சரி செய்ய மகாராஷ்டிரா மாநிலம் தாராபூரில் இருந்து அணுமின் நிலைய சிறப்பு ரியாக்டர் என்ஜினீயர்கள் வந்து ஆய்வு நடத்தினர்.

ஆனால் இன்று வரை 3 மாதங்கள் ஆகியும் நீர்க் கசிவை அதிகாரிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் மின்உற்பத்தி முடங்கி உள்ளது.

பழுதான ரியாக்டர் 35 ஆண்டுகள் பழமையான தொழில்நுட்பம் என கூறப்படுகிறது. முதல் அணுஉலை பழுதால் தமிழகத்துக்கு வழங்கி வந்த 75 சதவீத மின்சாரம் தடைபட்டுள்ளது. எனவே கோடையில் மின்சாரம் பற்றாக்குறை ஏற்படும். அபாயம் ஏற்பட்டுள்ளது. #tamilnews

Tags:    

Similar News